சிவகாசி நிதி நிறுவன மோசடி: புகார் அளிக்க அழைப்பு
சிவகாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கிய தனியார் நிதி நிறுவனம் (RMWC) முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை புகார் அளிக்காத பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் திருச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
