ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tiruchuli · agriculture

திருச்சுழி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் திருச்சுழி அருகே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், உரத்தட்டுப்பாட்டை நீக்கவும் வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சுழி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலையூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதுமான அளவு உரங்களை இருப்பு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்