ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kovilpatti · education

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி மாணவி சாதனை

சிப்பிப்பாறை அரசு பள்ளி மாணவி உமா மகேஸ்வரி, தொல்காப்பியத்தை முழுமையாக மனப்பாடம் செய்து 22 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி மாணவி சாதனை

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி உமா மகேஸ்வரி, தொல்காப்பியம் முழுவதையும் மனப்பாடம் செய்து, 22 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சிக்கு எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர். இந்த சாதனையை பாராட்டி மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் உள்ளிட்ட பலர் மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்