ETN NewsNews. Trust. Impact.
Sports

நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த பங்களாதேஷ்

24 ஏப்., 2026, 04:36 AM
வங்கதேசம் - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது.முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 119 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். லிட்டன் தாஸ் 91 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் வில் ரூர்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.பென் லிஸ்டர், ஜெய்டன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டீன் பான்ஃகிராப்ட் 75, நிக் கெல்லி 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் 5 விக்கெட்களை வீழ்த்தினார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்
Tamil Nadu
06 மே, 2026, 07:14 AM

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்

2016ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த அரசியல் கூட்டணி, 2026 சட்டம...

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்
Live Updates
06 மே, 2026, 07:11 AM

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார...

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TN Election 2026
04 மே, 2026, 04:43 AM

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக...