ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணியாகவும் டெல்லி சாதனை படைத்துள்ளது. அது 6 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் பவர்பிளேக்குள்ளேயே இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஹேசில்வுட் 3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எனினும், அதற்குப் பின் களமிறங்கிய அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து நின்றதுடன், 49 ரன்களைக் கடக்கவும் உதவினர். காரணம், ஐபிஎல் வரலாற்றிலேயே ஓர் அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் இதுதான்.
0Likes
0Dislikes
