ETN NewsNews. Trust. Impact.
World

தண்ணீருக்காக இனப்போர் ஆரம்பித்தது

29 ஏப்., 2026, 01:10 AM
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகதான் ஏற்படும் என பலர் கூறி வரும் நிலையில், அதனை உண்மையாக்கும் வகையில் தண்ணீருக்காக பெரும் போர் தற்போது ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டில் நடந்து வருகிறது. அங்கு தண்ணீர் பஞ்சம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதால், நாடே வன்முறை காடாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக இருந்த சாட் ஏரி (Lake Chad) தற்போது வறண்டுவிட்டது. அதாவது 1960-களில் 25,000 சதுர கிமீ பரப்பளவில் இருந்த இந்த ஏரி, இன்று வெறும் 1,500 சதுர கிமீ-க்கும் குறைவான பரப்பளவிலேயே உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் கொடுக்கும் ஆறுகளில் நீர் எடுப்பது அதிகரித்ததாலும், மழைப்பொழிவு குறைந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருக்கும் நீர் ஆதாரங்களுக்காக அங்கு பல்வேறு இன குழுக்களும் தங்களுக்கும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வாடி ஃபிரா (Wadi Fira) மாகாணத்தில் உள்ள நீர் நிலையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்துவது குறித்து இரு இனங்களுக்கு இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இது குறித்து சாட் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மோதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது. எனினும் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த போர் விரிவடைந்துள்ளதால் இதனை கட்டுப்படுத்த ராணுவம் திணறி வருகிறது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்
Tamil Nadu
06 மே, 2026, 07:14 AM

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்

2016ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த அரசியல் கூட்டணி, 2026 சட்டம...

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்
Live Updates
06 மே, 2026, 07:11 AM

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார...

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TN Election 2026
04 மே, 2026, 04:43 AM

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக...