ETN NewsNews. Trust. Impact.
India

லைப் ஜாக்கெட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம்

03 மே, 2026, 02:42 AM
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள பார்கி அணையில் 3 நாட்களுக்கு முன்பு படகில் சுற்றுலா சென்றபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம், படகுப் பயணங்களின்போது செய்ய வேண்டிய அடிப்படை விதிகளைக் கூட அந்தப் படகை இயக்கிய ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் தனது குழந்தையை மார்போடு இறுக அணைத்தபடி தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காட்சி கல்நெஞ்சங்களையும் உருக்குவதாக அமைந்துள்ளது. மேலும், அந்த வீடியோவில் சீல் கூட பிரிக்கப்படாத உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரைக் காக்க உதவும் லைப்-ஜாக்கெட்டுகளைப் பயணிகளுக்கு படகு ஊழியர்கள் வழங்கவில்லை. வீடியோவில் சுற்றுலாப் பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிடுவதும், தப்பிக்க முயல்வதும் தெரிகிறது. படகில் தண்ணீர் புகுந்த பிறகு அவசர அவசரமாக கட்டி வைத்திருந்த லைப் ஜாக்கெட்டுகளை அவிழ்த்து பயணிகளுக்கு வழங்குவது பதிவாகி உள்ளது. பயணிகள் பலர் லைப் ஜாக்கெட்டுகள் அணியாமல் அலறுவதும் தெரிகிறது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்
Tamil Nadu
06 மே, 2026, 07:14 AM

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்

2016ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த அரசியல் கூட்டணி, 2026 சட்டம...

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்
Live Updates
06 மே, 2026, 07:11 AM

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார...

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TN Election 2026
04 மே, 2026, 04:43 AM

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக...