இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் சுமார் 5,500 மையங்களில் இன்று நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 22.80 லட்சம் மாணவ, மாணவிகள், தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களில் தேர்வு நடைபெறும். அந்த வகையில், சுமார் 5,500 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.
0Likes
0Dislikes
