அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானில் வீசி, இதுவரை வெடிக்காமல் இருக்கும் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' (Reverse Engineering) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகல் எடுக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இரானின் ஆங்கில அரசுத் தொலைக்காட்சியான 'பிரஸ் டிவி' வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஈரானின் ஹோர்மூஸ்கான் மாகாணத்தில் வெடிக்காத 15-க்கும் மேற்பட்ட கனரக அமெரிக்க ஏவுகணைகளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்துள்ளதாகவும், இந்த ஆயுதங்களின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு, அதனை மீண்டும் உருவாக்குவதற்காக இந்த ஆயுதங்கள் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
ஈரான் அமெரிக்காவின் இந்த ஆயுதங்களை ரிவர்ஸ் இன்ஜினியரிங் மூலம் உருவாக்கினால் அது எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0Likes
0Dislikes
