கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம் 'சேலம் ஜவுளி பூங்கா' (Salem Textile Park). இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எம்.எல்.ஏ லட்சுமணன் இதனை உடனடியாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். "எனது முதல் மற்றும் முதன்மையான நோக்கம், சேலம் ஜவுளி பூங்காவில் தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துவதுதான்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரின் முதல் முன்னுரிமை தொகுதி வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு உற்பத்தி சார்ந்த (Manufacturing sector) திட்டத்தை முடக்குவதே தனது லட்சியம் என்று அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சேலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் உதவும் ஒரே நம்பிக்கையாக இந்த ஜவுளி பூங்கா பார்க்கப்பட்டது.
வளர்ச்சியா? அரசியலா? - வாக்காளர்களின் குமுறல் சேலம் மாநகரப் பகுதி வாக்காளர்கள், குறிப்பாக கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தினர், இத்தகைய சட்டமன்ற முன்னுரிமைகளைக் கண்டு அதிருப்தியில் உள்ளனர். "மாற்றத்தை விரும்பி வாக்களித்த சேலம் நகர வாக்காளர்களுக்கு இதுதான் பரிசா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு புறம் அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூரும், ஈரோடும் தொழில் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், சேலம் மட்டும் ஏன் பின்னோக்கிச் செல்கிறது என்ற ஆதங்கம் மக்களிடையே எழுந்துள்ளது.
0Likes
0Dislikes
