ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையுமாறு ஒன்றிய அரசு கடிதம்

06 மே, 2026, 12:40 PM
தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசை நிர்பந்திக்கும் வகையில் இருமுறை கொள்கைக்கு எதிராக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையுமாறு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பிஎம் ஸ்ரீ என்னும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் நோக்கம் கொண்டது என கூறி இத்திட்டத்தை திமுக அரசு எதிர்த்து வந்தது. மேலும் பொதுப் பட்டியலில் கல்வி உள்ளதால், ஒன்றிய அரசின் திட்டத்தை ஏற்க நிர்பந்திப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேரத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வந்ததால், சுமார் ரூ.2,151 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதைபோல் மேற்குவங்க மாநில அரசும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநில அரசின் 40% சதவீதம் நிதிப் பங்களிப்பு இருந்தும், திட்டத்தின் பெயரில் "பிரதான் மந்திரி" என்ற ஒன்றிய அரசின் முத்திரை இருப்பதாக மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி விமர்சித்தார். இந்தநிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசை நிர்பந்திக்கும் வகையில் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையுமாறு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0Likes
1Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்
Tamil Nadu
06 மே, 2026, 07:14 AM

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்

2016ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த அரசியல் கூட்டணி, 2026 சட்டம...

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்
Live Updates
06 மே, 2026, 07:11 AM

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார...

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TN Election 2026
04 மே, 2026, 04:43 AM

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக...