தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி சுனில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஜூலை 17-ம் தேதி விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அருணாச்சலம், விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக அவர் தெரிவித்தார். உடனடியாக அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெற்றோர்கள் மற்றும் காவலர்கள் உதவியுடன் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையிலும் அருணாச்சலம் மயங்கி விழுந்ததாகக் குறிப்பிட்ட டிஎஸ்பி, அவருக்குத் தலையில் காயம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார். அவர் காவல்துறையினரால் தாக்கப்படவில்லை என்றும், இது 'லாக்கப் டெத்' (காவல் மரணம்) அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
0लाइक्स
0डिसलाइक्स




