ETN NewsNews. Trust. Impact.
World

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை முழு விவரம்

12 ஏப்., 2026, 02:44 AM
இஸ்லாமாபாத்தில் 21 மணி நேர பேச்சுவார்த்தை — ஒப்பந்தமின்றி அமெரிக்கா திரும்பியது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவும் ஈரானும் நேருக்கு நேர் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 1979க்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தையில் 21 மணி நேரமும், மூன்று சுற்று விவாதங்களும் கடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை — ஆனால் இது அமெரிக்காவை விட ஈரானுக்கே அதிக இழப்பு" என்று தெரிவித்தார். அணு ஆயுதம் தேடுவதில்லை என்ற திட்டவட்டமான உறுதிமொழியை ஈரான் தர மறுத்தது தான் பேச்சுவார்த்தை சிக்கலானதற்கு முக்கிய காரணம் என வான்ஸ் சுட்டிக்காட்டினார். அமெரிக்க தரப்பினர் "இறுதியான மற்றும் சிறந்த முன்மொழிவை" மேசையில் விட்டுவிட்டு புறப்பட்டனர். ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு, போர் இழப்பீடு, உறைந்த சொத்துக்கள் திரும்பப் பெறுதல் ஆகிய நான்கு பாயின்ட்களில் இரு தரப்பும் உடன்படவில்லை. பாகிஸ்தான் கடைசி வரை சமரசம் ஏற்படுத்த முயன்றதாக தெரிகிறது. அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடக்கும் போது மியாமியில் UFC போட்டி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் 21 மணி நேரமும் ஒரு டஜன் முறை வரை ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்கு பின்னரும் கதவு முழுமையாக மூடப்படவில்லை என்ற சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.
1Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது
TN Election 2026
30 ஏப்., 2026, 04:31 PM

Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு ஒரு வலுவான அறிமுகத்தை கணித்துள்ளது, இது 63 ± 11 இடங்களையும் 30 சதவீதம் (±3 சதவீதம்) வாக்கு பங்கையும் மதிப்பிடுகிறது. இந்த உயர்வுக்கு முக்கி...

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை
India
30 ஏப்., 2026, 04:18 PM

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற...

காக்னிசென்ட் பணிநீக்கம்... !
World
30 ஏப்., 2026, 01:33 PM

காக்னிசென்ட் பணிநீக்கம்... !

காக்னிசென்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1% ஆக இருக்கும் 4,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தேவை குறைதல் மற்றும் AI-க்கு மாறுதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒ...

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே
Tamil Nadu
30 ஏப்., 2026, 01:00 PM

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே

தேர்தல் முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது....