இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, வான்ஸ் விமானம் ஏறிய சில நிமிடங்களிலேயே ஈரானின் புரட்சிகர காவலர் படை IRGC கடுமையான அறிக்கை வெளியிட்டது.
"போரில் அடைய முடியாததை பேச்சுவார்த்தை மேசையில் பெற்றுவிட அமெரிக்க எதிரி முயற்சித்தது. ஈரான் அந்த நிபந்தனைகளை நிராகரிக்க முடிவு செய்துள்ளது. தாய்நாட்டை காப்பாற்றும் போரை எந்த வழியிலும் தொடர்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா என்ன கேட்டது என்று IRGC குறிப்பிடுகிறது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மையை கைவிட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஈரான் ஏற்க மறுத்தது.
0Likes
0Dislikes
