பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் பாஜகவினரை நினைத்து பெருமைப்படுவதாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் தமிழக வருகையில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. தேசிய தலைவர்களின் பரப்புரை திட்டம் இன்னும் 3 முதல் 4 நாட்களில் வெளியாகும் என கிரிஷ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார். பரமக்குடி பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கையிடம் பேசச் சொன்னால், விஸ்வகுரு மோடி மௌன குருவாகிவிடுகிறார் என விமர்சித்தார். நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். முதல்வர் ஸ்டாலினின் உரை உண்மைகளைத் திரித்துக் கூறும் செயல் எனவும் அவர் விமர்சித்தார். சாதனைகளைப் பேசாமல் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேசுகிறார் பழனிசாமி என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். பெண்களை கண்ணியமின்றி பழனிசாமி பேசுவதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி பேசவேண்டிய அவசியமும் இல்லை" என்றார். சீர்காழியின் மாப்பிள்ளை ஸ்டாலினாக இருக்கலாம், ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கியது அதிமுகதான் என பழனிசாமி பேசினார். படையப்பா படத்தின் நகைச்சுவை காட்சியை அவர் குறிப்பிட்டுப் பேசினார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்காதவர்களுக்கு மக்கள் தக்க தண்டனை அளிப்பார்கள் என பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராமநாதபுரம் பரப்புரைக் கூட்டத்தில் பேசினார். சேலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பாமக தலைவர் ராமதாசுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையில் மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். மகாதானபுரத்தில் சைக்கிள் ஓட்டி அவர் வாக்கு சேகரித்தார்.
0Likes
0Dislikes
