புதுச்சேரி மாநிலத்தில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டீக்கடை உரிமையாளர்கள், டீ மற்றும் காபி விலையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளனர்.
நடைமுறையில் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கப் டீ இனி ரூ.20 ஆகவும், ரூ.15க்கு கிடைத்த காபி ரூ.30 ஆகவும் விற்கப்படும். இந்த புதிய விலை நிர்ணயம் ஏப்ரல் 14 முதல் அமலுக்கு வரும் என்று கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
0Likes
0Dislikes
