ETN NewsNews. Trust. Impact.
Sports

பார்சிலோனா அவுட் !

16 ஏப்., 2026, 07:33 AM
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட கால் இறுதி ஆட்டத்தில் நேற்று அட்லெடிகோ மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் உள்ள மெட்ரோ பொலிடானோ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் மாட்ரிட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற முதற்கட்ட கால் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் சராசரி கோல்விகிதப்படி அட்லெடிகோ மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஆன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு 2-வது கட்ட கால் இறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி, லிவர்பூல் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் உஸ்மான் டெம்பலே 72 மற்றும் 90+1-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். முதற்கட்ட கால் இறுதி ஆட்டத்திலும் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதன் வாயிலாக சராசரி கோல்விகிதப்படி பிஎஸ்ஜி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.
0Likes
1Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்
Tamil Nadu
06 மே, 2026, 07:14 AM

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்

2016ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த அரசியல் கூட்டணி, 2026 சட்டம...

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்
Live Updates
06 மே, 2026, 07:11 AM

தவெக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும்

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார...

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TN Election 2026
04 மே, 2026, 04:43 AM

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

டிவிகே தலைவர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக...