செங்கல்பட்டில் 3 வயது சிறுமி விபத்தில் உயிரிழப்பு: இழப்பீடு கோரி மறியல்
செங்கல்பட்டில் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அருகே இருங்குன்றம்பள்ளியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மகிழினி, அதிவேகமாக வந்த வாகனத்தில் மோதி உயிரிழந்தார்.
இந்த விபத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், இழப்பீடு கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
