செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

மேல்மருவத்தூர் ஆதிபுராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் ஆடிப் பூரத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 14) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி பணி நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
