ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chengalpattu · district

மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது பிரமாணப் பத்திரத்தில் ரூ.2.27 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்ததாக டி.சிவஞானசம்பந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் உள்ள இந்த சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் ஜூலை 27 அன்று விசாரணைக்கு வருகிறது.

செய்தி மூலம்: Tamil Indian Express - Tamil Nadu

← மேலும் மாவட்ட செய்திகள்