திருக்கழுக்குன்றம் அருகே கோயில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கதவை உடைத்து மர்ம நபர்கள் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கோயிலுக்குச் சென்ற அர்ச்சகர், கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
