சங்கராபுரம் பெண் கொலையில் சகோதரர் உள்பட 4 பேர் கைது
சங்கராபுரம் அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் சகோதரர் உட்பட 4 பேர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டு வானஞ்சூர் கிராமத்தில் தீபா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தீபாவின் தந்தை தனது சொத்து நிலத்தை தீபா பெயருக்கு மாற்றி எழுதியதை எதிர்த்து, அவரது சகோதரர் காந்த் சொத்தை தன் பெயருக்கு மாற்ற வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பான தகராறில் தீபாவை அவர் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் ரமேஷ்குமார், சரத்குமார், மணிகண்டன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
