இந்து ஆதி பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பூம் பூம் இசைத்து ஆட்சியரிடம் மனு
பூம் பூம் மாட்டுக் காரர் இன மக்கள், இந்து ஆதி பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தில் வசிக்கும் பூம் பூம் மாட்டுக் காரர் இன மக்கள், தங்களுக்கு 'இந்து ஆதி பழங்குடியினர்' என்ற சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இச்சமூக மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவியான பூம் பூம் இசையை இசைத்தவாறே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி தொடர சாதிச் சான்றிதழ் அவசியம் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
