'லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்': காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சத்திற்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை இயக்கம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்’ என்ற முழக்கத்துடன் இந்திய காங்கிரஸ் சார்பில் கையெழுத்து மற்றும் கைரேகை இயக்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இதயத்துல்லா, மாநில துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பொதுமக்களிடம் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
