சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் விவசாயிகள் நூதன போராட்டம்
நாமக்கல்லில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் வளையப்பட்டி சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
