நாமக்கல்லில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் எம்.அசோகன் மற்றும் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி ஆகியோர் பேசினர்.
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி செய்யும் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், உள்ளாட்சி பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
