ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · business

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பான செயல்பாடு: நாட்டின் ஜிடிபி-யில் 30% பங்களிப்புடன் தமிழகம் 2-வது இடம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் ஜிடிபி-யில் 30 சதவீத பங்களிப்புடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அமைச்சர் மதன் ராஜா தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பான செயல்பாடு: நாட்டின் ஜிடிபி-யில் 30% பங்களிப்புடன் தமிழகம் 2-வது இடம்

தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் நாட்டின் ஜிடிபி-யில் 30 சதவீத பங்களிப்பை வழங்கி இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் மதன் ராஜா தெரிவித்தார். சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்த அமைச்சர், இது குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் உள்ள வெள்ளிக் கொலுசு உற்பத்தி மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் மதன் ராஜா ஆய்வு செய்தார். அப்போது, சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் ஆனந்தராஜன், உற்பத்தி மையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை மானியத்தில் அல்லது வட்டி இல்லாக் கடன் முறையில் வழங்கவும், புவிசார் குறியீடு பெற்றுத் தரவும் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் தனது ஆய்வின் போது, மாவட்ட தொழில் மையம் மூலமாக பயனடைந்தவர்களின் நிறுவனங்களை பார்வையிட்டு, ஏற்றுமதி மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்