கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அறிவித்த வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், சிறு, குறு, பெரிய விவசாயி என்ற பாகுபாடு இன்றி அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், இது குறித்த கொள்கை அறிவிப்பை வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
