பொறியியல் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழிப் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழிப் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடைபெறவுள்ளது.
நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் 2.36 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தற்காலிக ஒதுக்கீடு விவரங்கள் வரும் 24-ம் தேதி வெளியிடப்படும் என பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
