வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூரில் வளரிளம் பெண்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் பள்ளியில் இன்னர் வீல் கிளப் ஆஃப் தஞ்சாவூர் ஹெரிடேஜ் சிட்டி சார்பில் 'மிஷன் சக்தி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வளரிளம் பெண்களின் உடல்நலம், மாதவிடாய் கால சுகாதாரம், சமச்சீர் உணவு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் இணையவழி பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
