பேராவூரணியில் 4 கடைகள் எரிந்து சேதம்
பேராவூரணியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாகின.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து சேதமடைந்தன. புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பஞ்சர் கடை மற்றும் உணவகம் வரை பரவியது.
தீ விபத்தில் கடைகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
