500 கிலோ எடையில் ஐம்பொன் வெற்றி தூண் வார்ப்பட நிகழ்ச்சி
கும்பகோணம் அருகே 500 கிலோ எடையுள்ள ஐம்பொன் வெற்றித்தூண் வடிவமைப்பதற்கான வார்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம் புளியஞ்சேரியில் 500 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றித்தூண் வடிவமைப்பதற்கான வார்ப்பட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் இந்தத் தூண் அமைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் கும்பகோணம் தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
