ETN News சமீபத்திய அப்டேட்கள்
Peravurani · district

பேராவூரணி அருகே குளத்தில் அதிகளவு மண் அள்ளியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

பேராவூரணி அருகே அனுமதியை மீறி குளத்தில் அதிக ஆழத்திற்கு மண் அள்ளியதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பேராவூரணி அருகே குளத்தில் அதிகளவு மண் அள்ளியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள குளத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்திற்கு மண் அள்ளப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் புகாரின்படி, குளத்தில் 2 அடி ஆழம் வரை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 10 அடி ஆழம் வரை மண் அள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரை, மண் அள்ளியவர்கள் மிரட்டியதாகத் தெரிகிறது.

தகவலறிந்து வந்த பேராவூரணி காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மண் அள்ளியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்த காவல்துறை, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்