நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் வேலைநிறுத்தம்
நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவகால ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நகர்த்த வேண்டும் என்றும், இயற்கை இடர்பாடுகளால் சேதமடையும் நெல்லுக்கு பணியாளர்கள் மீது அபராதம் விதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். மேலும், கொள்முதல் நிலையங்களில் தரமான சாக்குகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
