தஞ்சாவூர் அரசு பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2,062 பள்ளிகளின் கட்டிடங்களைப் பாதுகாப்பிற்காக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,062 பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் குழுவினர் பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பழுதுபார்க்க வேண்டிய கட்டிடங்களைச் சரிசெய்யவும், பொதுப்பணித்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
