மத்திய மண்டலத்தில் வாகன சோதனை: ஒரே நாளில் 3,284 வழக்குகள் பதிவு
திருச்சி மத்திய மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையில், விதிமீறலில் ஈடுபட்டதாக 3,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அதிரடி வாகன சோதனையில், விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது மொத்தம் 3,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் 514 வழக்குகள், திருச்சியில் 489, தஞ்சாவூரில் 467, நாகையில் 375, அரியலூரில் 299, திருவாரூரில் 226, பெரம்பலூரில் 224, மயிலாடுதுறையில் 170 வழக்குகள் என மாவட்டம் வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
