மன்னர் சரபோஜி கல்லூரியில் உயிர்காக்க சிகிச்சை பயிற்சி
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிபிஆர் எனப்படும் உயிர்காக்க உதவும் சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில், இந்திய குழந்தை மருத்துவக் கழகம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சாவூர் கிளை இணைந்து, இதய-நுரையீரல் மீளுயிர்ப்பு (சிபிஆர்) குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அவசர காலத்தில் உயிர்காக்க உதவும் சிபிஆர் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இப்பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
