தஞ்சாவூரில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி மனு
தஞ்சாவூரில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி அனைத்து மக்கள் இயக்கத்தினர் ஆவின் பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் நகரில் கடந்த ஒரு மாதமாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணக்கோரி, அனைத்து மக்கள் இயக்கங்களின் சார்பில் ஆவின் பொது மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் பல்வேறு மக்கள் இயக்க நிர்வாகிகள் இந்த மனுவை வழங்கினர். ஆவின் பால் தட்டுப்பாட்டினால் தாய்மார்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
