கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரணி
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வை வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிய ஊதிய உயர்வை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதிய உயர்வுடன் பலன்களை வழங்க வேண்டும், பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
