இந்திய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை கட்டுமானத்தை எதிர்த்தும், காவிரி நீர் வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
