வேலூர் மூதாட்டி கொலை: கூலி தொழிலாளி கைது
வேலூர் அம்பேத்கர் சிலை அருகே மூதாட்டி ஒருவர் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூலி தொழிலாளி கோவிந்தசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் அம்பேத்கர் சிலை அருகே மூதாட்டி ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் (65) என்பது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பொய்கை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தசாமி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
