வேலூர் அலமேலுமங்காபுரத்தில் கூழ்வார்த்தும் திருவிழா
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 7-ஆம் ஆண்டு கூழ்வார்த்தும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் அலமேலுமங்காபுரம், ஏரியூர், மதிநகர் மற்றும் ஜெகஜோதி நகர் பகுதிகளில் உள்ள வலம்புரி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 7-ஆம் ஆண்டு கூழ்வார்த்தும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 9 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கரகம் திருவீதி உலா நடைபெற்றது. மதிநகர் மற்றும் ஏரியூர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற கரகத்திற்கு பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தும் திருவிழா நடைபெற்றது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
