மேல்வாழப்பந்தல் மலை கிராமத்துக்கு சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கோரி மலை கிராம மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், அணைக்கட்டு அடுத்த மேல்வாழப்பந்தல் மலை கிராம மக்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி மனு அளித்தனர்.
அதேபோல், வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி கோரியும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மேகநாதன் உள்ளிட்டோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
