திருப்பத்தூரில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூரில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிலுவைத்தொகை கோரி 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
