தற்காலிக நிலை
தமிழகத்தில் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய 20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னுரிமை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு,
அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய 25 நாட்கள் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை நிலவரம் (சென்னை – மார்ச் 2026)
வீட்டு பயன்பாட்டு LPG சிலிண்டர்:
₹928.50
வணிக பயன்பாட்டு LPG சிலிண்டர்:
₹2,043.50
தட்டுப்பாட்டிற்கான காரணம்
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இறக்குமதி தாமதமாகியுள்ளது.
மத்திய அரசின் விளக்கம்
சிலிண்டர்களைப் பதுக்குதல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகள் எஸ்மா சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை
தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் LPG பயன்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0Likes
0Dislikes
