LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

தலைப்புச் செய்திகள்

22 மார்., 2026, 02:37 AM
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தேசிய பொதுச் செயலர் எம்.ஏ.பேபி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய ஆலோசனை; திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதற்கு சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென நிபந்தனை விதிக்க முடிவு திமுக கூட்டணியில் விசிகவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது; புரிதல் இருப்பதால் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வை எட்ட உள்ளோம் என்றும் புதிய தலைமுறைக்கு திருமாவளவன் பேட்டி டெல்லிக்கு நாங்கள் வந்தாலே பயப்படுகிறார் ஸ்டாலின்; டெல்லியைக் காட்டி திமுகவால் இனி ஏமாற்ற முடியாது என்றும் தினகரன் திட்டவட்டம் நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தினமும் நான்கு அல்லது ஐந்து இடங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டம் தமிழ்நாட்டிற்கு திமுகவும், புதுச்சேரிக்கு காங்கிரசும் தலைமை என்ற மரபை பின்பற்றுவோம்; காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் விஜய்; வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரம் போருக்கு இடையில் ஈரானில் பிறந்த புத்தாண்டு; ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மீட்போம் என உயர் தலைவர் மொஜ்தபா வாழ்த்துச் செய்தி தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலுக்கு 3 ரூபாயும், 20 லிட்டர் கேனுக்கு 5 ரூபாயும் விலை உயர்வு; மூலப்பொருள், மின் கட்டண உயர்வே காரணம் என அறிவிப்பு திருவண்ணாமலை கோயிலில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் நிறுத்தம்; விறகு அடுப்பில் லட்டு தயாரிப்பதற்கு அனுமதிபெற கோயில் நிர்வாகம் முயற்சி
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...