LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
India

உரம் தட்டுப்பாடு இல்லை: நிர்மலா சீதாராமன் பதில்

14 மார்., 2026, 04:13 AM
நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி செலவினம் அதிகரிக்கவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த செலவை ரூ.50.65 லட்சம் கோடியிலிருந்து, ரூ.49.65 லட்சம் கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. ஜனவரி மாதம் வரை அரசு ரூ.36.90 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. உரம் மானியத்துக்காக கூடுதலாக ரூ.19,230 கோடியும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மானியத்துக்கு ரூ.23,641 கோடி செலவு செய்ய அனுமதி கோரப்பட் டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு ரூ.41,822 கோடி உட்பட இதர செலவுக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரத்தில் பற்றாக்குறை ஏதும் நிலவவில்லை. மானியங்களுக்கு துணை மானியக் கோரிக்கையில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...