LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

இன்றைய தலைப்புச் செய்திகள்

15 மார்., 2026, 03:33 AM
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை; எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருவதாக மத்திய அரசு தகவல்; இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் விளக்கம் தட்டுப்பாடு அச்சத்தின் காரணமாக நாட்டில் LPG சிலிண்டர் முன்பதிவுகள் திடீரென அதிகரிப்பு; தேவையுள்ளபோது மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை திட்டவட்டம்; ஒன்பது நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளதாகவும் விளக்கம். மின் அடுப்பு பயன்படுத்துவதால் உணவகங்களுக்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை; சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை சரியாகும் வரை சலுகை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு பொது விநியோக திட்டத்துக்கு இந்த மாதம் கூடுதலாக 3 ஆயிரத்து 228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்; குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு ஆணை மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?; எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி மேற்காசிய போரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அசாமில் பிரதமர் மோடி பேச்சு; மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொறுப்பற்று செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் தங்களுக்கும் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்; அதிக தொகுதிகள் கொடுக்க முடியாது என்று திமுக சொல்வதில் நியாயம் இல்லை என்றும் பெ.சண்முகம் கருத்து தவெகவுடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...