LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

தலைப்புச் செய்திகள்

18 மார்., 2026, 04:26 AM
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 23.28 கோடி ரூபாய் பணம் பறிமுதல்; மாநிலம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர் நேர்காணலை தொடங்கியது திமுக; புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களிடம் விவரம் கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக -மார்க்ஸிஸ்ட் இடையே நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இழுபறி; கூடுதல் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளதாக பெ.சண்முகம் பேட்டி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்போது?; கூட்டணி தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பதில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து ஆபாசமாக பேசிய சி.வி.சண்முகம்; அதிமுக முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு பெண்களை இழிவுபடுத்துவதே அதிமுகவின் வாடிக்கை என திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்; சி.வி.சண்முகம் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல் காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை; ஆதவ் அர்ஜுனாவின் அவதூறுக்கு பதிலடி கொடுத்து, தனக்கு துணை நின்றவர்களுக்கும் நன்றி தெரிவித்த ரஜினி ரஜினி குறித்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா... ரஜினிகாந்த் மீது வெறுப்பு இல்லை; அன்பு மட்டுமே இருப்பதாகவும் பேச்சு.. தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என ஆதவ் அர்ஜூனா திட்டவட்டம்; 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என பேரம் பேசப்பட்டதாகவும் பேச்சு
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...