கனடாவின் நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சேலத்தை எதிர்கொண்ட 18 வயதான அனஹத், 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 2011-ம் ஆண்டு முதல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வந்த 13 ஆண்டுகால தொடர்ச்சியை அனஹத் முறியடித்துள்ளார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு எகிப்து அல்லாத ஒரு வீராங்கனை இந்தப் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்த அனஹத், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு செட்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவிற்கு முதல்முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை பெற்றுத் தந்துள்ளார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

